முதல் முறையாக குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட சரவணன் மீனாட்சி ரியல் ஜோடி.! வைரல் புகைப்படங்கள்!

மெர்ச்சி செந்தில் - ஸ்ரீஜா தம்பதி முதல் முறையாக தங்களுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி 90ஸ் கிட்ஸ் ஃபேவரைட் சீரியல் மற்றும் ஜோடியாக அனைவரையும் கவர்ந்த சரவணன் மீனாட்சி ஜோடியை யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது. சரவணன் மீனாட்சி சீரியலின் முதல் பாகத்தில் நடித்த மெர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா ரசிகர்களின் ஆதரவை அமோகமாக பிடித்திருந்தனர்.
முதல் சீரியலிலே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு சில வருடங்களாக எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்த ஸ்ரீஜா ஒரு சில வருடங்கள் கழித்து மீண்டும் செந்திலுடன் மாப்பிள்ளை என்னும் சீரியலில் ஜோடி சேர்ந்தனர்.
சரவணன் மீனாட்சி சீரியலில் கணவன் மனைவியாக நடித்த ஜோடி கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். 8 வருடங்களுக்கு பிறகு தனது மனைவி ஸ்ரீஜா கர்ப்பமாக இருக்கும் செய்தியை செந்தில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில், கடந்த ஜனவரி 4-ம் தேதி இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்ததுள்ளது.
செந்தில் - ஸ்ரீஜா தம்பதிக்கு திருமணம் ஆகி கிட்ட தட்ட 9 வருடங்கள் ஆகும் நிலையில், ஓரிரு நாட்களுக்கு முன்னர், இருவரும் தங்களின் 9-வது ஆண்டு திருமண நாளை எளிமையான முறையில் வீட்டிலேயே கொண்டாடி உள்ளனர். அப்போது எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
அதாவது இந்த புகைப்படத்தின் மூலம், சுமார் 8 வருடங்கள் கழித்து தங்களுக்கு பிறந்த மகனின் முகத்தை முதல் முறையாக ரசிகர்களுக்கு காட்டியுள்ளனர் செந்தில் - ஸ்ரீஜா ஜோடி. பார்ப்பதற்கு ஸ்ரீஜா மாதிரியே குழந்தை உள்ளதாக, ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த புகைப்படமும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.