தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா.. மேலும் 2 பிரபலங்கள்.. வேற லெவலில் இருக்கும் போல..!

 
Dhanush - Rashmika

தனுஷ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இப்படம் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் ஜூலை 28-ம் தேதி நடிகர் தனுஷின் பிறந்தநாளன்று ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

Captain Miller

கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து தற்போது தனது 50-வது படத்தில் நடித்து வருகிறார் தனுஷ், சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை தனுஷே இயக்குகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷான், விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பிரபல தெலுங்கு பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ஒன்று குறித்த தகவல் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தில் 4 பிரபலங்கள் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Dhanush

ஒருவர் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா என்றும் இன்னொருவர் ராஷ்மிகா மந்தனா என்றும் கூறப்படுகிறது. தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகவும் நாகார்ஜுனா முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் சாய்பல்லவியும் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்திற்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்த படத்திற்கு வேற லெவலில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

From around the web