ராஷ்மிகா, ஆலியா பட் வீடியோவை தொடர்ந்து.. டீப் ஃபேக்கில் சிக்கிய நடிகை பிரியங்கா சோப்ரா!

 
Priyanka chopra

நடிகை பிரியங்கா சோப்ராவின் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பத்திற்கும் நமக்குமான இடைவெளியை இன்னும் குறைத்துள்ளது. ராக்கெட் தொழில்நுட்பத்தில் இருந்து நாம் விடுப்புக் கடிதம் வரை, அதி நவீன தொழில்நுட்பத்தில் இருந்து நமது அன்றாட வாழ்விற்குத் தேவையான விஷயங்களைக் கூட செய்யும் அளவுக்கு செயற்கை நுண்ணறிவு இன்று மேம்பட்டுள்ளது.

Priyanka Chopra

முதன் முதலாக, நடிகை ராஷ்மிகா மந்தனா ஆபாச உடையில் லிப்பிடிற்குள் நுழைவது போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ குறித்து விசாரித்தபோது தான். அது ராஷ்மிகா மந்தனாவே இல்லை என்பதும், அது டீப் ஃபேக் செய்யப்பட்ட இந்திய வம்சாவளியான இங்கிலாந்தில் வசிக்கும் யுடியூவரின் வீடியோ என்பதும் தெரியவந்தது. அப்போது இது குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா மனமுடைந்து உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

அதை தொடர்ந்து நடிகை கத்ரினா கைஃப்-ன் டீப் ஃபேக் செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே இதுபோன்ற டீப் ஃபேக் செய்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. எனினும் இந்த டீப் ஃபேக் சிக்கல் தீர்ந்த பாடில்லை. ராஷ்மிகா மந்தனாவை தொடர்ந்து, கத்ரினா கைஃப், கஜோல், ஆலியா பாட் என பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது.

Priyanka chopra

இந்நிலையில் அந்த வரிசையில் நடிகை பிரியங்கா சோப்ரா டீப் ஃபேக்கில் சிக்கியுள்ளார். டீப் பேக் செய்யப்பட்ட அந்த வீடியோவில் ஒரு நிறுவனத்தில் ப்ரமோஷன் விழாவில் பங்கேற்கும் பிரியங்கா சோப்ரா, தனது ஆண்டு வருமானத்தை கூறி அந்த நிறுவனத்துக்கு விளம்பரம் செய்வது போல டீப் பேக் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல டீப் ஃபேக் செய்யப்பட்ட ஆபாச ( Deep Fake Porn) வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web