யோகா மாஸ்டருடன் காதல் வயப்பட்ட ரம்யா பாண்டியன்.. விரைவில் டும்.. டும்.. டும்..

 
Ramya

நடிகை ரம்யா பாண்டியனுக்கு வரும் 8-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2015-ம் ஆண்டு டம்மி பட்டாசு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் ரம்யா பாண்டியன். அதன் பின்னர் 2016-ல் ஜோக்கர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ரம்யாவின் நடிப்பு ஏகப்பட்ட பாராட்டுகளை பெற்றது. இப்படம் பல விருதுகளையும் பெற்றது. 

அடுத்ததாக சமுத்திரக்கனியுடன் இணைந்து ஆன் தேவதை படத்தில் நடித்தார். பிரபலமான நடிகையாக வலம் வந்த ரம்யாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் ஒன்றும் கிடைக்கவில்லை. இதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக பங்குபெற்றார்.

Ramya Pandiyan

பிக் பாஸ் போட்டியில் இறுதிவரை தாக்குப்பிடித்து ரம்யா மூன்றாவது இடத்தை பிடித்தார். அதன்பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மற்றும் சினிமா பட வாய்ப்புகள் என அடுத்தடுத்து ரம்யா பாண்டியனுக்கு சான்ஸ் கிடைத்து இன்று செம்ம பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ரம்யா பாண்டியன் பெங்களூருவில் செயல்பட்டு வரும் யோகா மையத்தில் சேர்ந்தார். அங்கு பணியாற்றி வந்த யோகா மாஸ்டர் லவல் தவான் என்பவருடன் ரம்யா பாண்டியனுக்கு நல்ல நட்பு ஏற்பட்டு பின்பு, அது காதலாக மாறியது. 

Ramya Pandiyan

இதன் நீட்சியாக இருவருக்கும் அவரவர் குடும்பத்தாரின் ஒப்புதலுடன் வரும் நவம்பர் 8-ம் தேதி உத்தராகண்டில் உள்ள ரிஷிகேஷில் கோவில் ஒன்றில் திருமணம் நடைபெற உள்ளது. நவம்பர் 15-ம் தேதி சென்னையில் திருமண வரவேற்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

From around the web