கோவாவில் ரஜினியின் ஜெயிலர் 2? வெளியானது அறிவிப்பு டீசர்!!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு டீசர் வெளியாகியுள்ளது.
நெல்சனின் வழக்கமான ப்ரோமோ வீடியோ பாணியில் தொடங்கும் இந்த டீசரில் அனிருத்துடன் கோவாவில் இருக்கிறார் நெல்சன். அடுத்த படம் பண்ணனும், என்னுடைய படம் வந்த பிறகு சென்னையில் 4 புயல் வந்துடுச்சு, ட்ரம்ப் மீண்டும் வந்துட்டாரு என்று அனிருத்துடன் நெல்சன் சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் அங்கே ஒரு சண்டைக்காட்சி தொடங்குகிறது
ஜெயிலர் படத்தின் டைனிங் டேபிள் காட்சி போல், அனிருத்தும் நெல்சனும் அங்கே சிக்கித் தவிக்கிறார்கள். ரஜினியின் மாஸ் அறிமுகக் காட்சியைத் தொடர்ந்து வெளியே கடற்கரை ஓரம் இன்னொரு மாஸ் காட்சியுடன் ரஜினி சூப்பர் போஸ் கொடுக்கிறார். இதே சூப்பரா இருக்கே, இதையே பண்ணிடலாமே நெல்சா என்று அனிருத் கூற டீசர் முடிகிறது.
ஆக, கோவா பின்னணியில் ஜெயிலர் 2 படம் அமைந்துள்ளதாகவும் தெரிகிறது.