ரஜினிகாந்தின் கூலி திரைப்படம்! படப்பிடிப்பு நிறைவு வெளியீடு எப்போது?

 
Coolie

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக வெவ்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூலி படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா, கன்னட பிரபல நடிகர் உபேந்திரா, மலையாள நடிகரும் இயக்குனருமான சோபின் ஷகிர், ஸ்ருதி ஹாசன் மற்றும் சத்யராஜ் நடித்துள்ளனர். இந்தி நடிகர் ஆமிர் கான் சில காட்சிகளில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அனிருத் இசையில் பூஜா ஹெக்டே ஒரு நடனத்தில் தோன்றியுள்ளார்.

படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் மற்ற பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. படத்தின் வெளியீடு குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.