ரஜினிகாந்தின் கூலி பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!!

 
Coolie

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகரம் படத்தைத் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் என வெற்றிப்படங்களை  தந்து கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

ரஜினியுடன் சத்யராஜ், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா,  கன்னட நடிகர் உபேந்திரா மற்றும் சுருதிஹாசன் நடித்து வரும் இந்தப் படத்தின் படப்படிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. ஐதராபாத் சென்னை படப்படிப்புகள் முடிவடைந்த நிலையில் பாங்காங்கில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. ரஜினிகாந்த் பாங்காக் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் வரும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் ஆகஸ்டு 14ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு ஆகஸ்டு சுதந்திர தினத்திற்கு ரஜினியின் ஜெயிலர் வெளியானது.

From around the web