3 நிமிட டீசருடன் வெளியானது ரஜினிகாந்த் படத்தின் டைட்டில்... தீயாய் பரவும் வீடியோ!

 
Coolie

ரஜினியின் 171-வது படத்துடைய டைட்டில், 3 நிமிட டீசருடன் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜெயிலர் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ஞானவேல் இயக்கத்தில் தற்போது ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினியுடன் பகத் பாசில், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வேட்டையன் படத்தின் ஷூட்டிங் 70 சதவிகிதம் முடிந்துவிட்டதாக ரஜினிகாந்த் அண்மையில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். இந்த படம் 2024 அக்டோபர் மாதத்தில் வெளியாக இருக்கிறது.

Coolie

அடுத்தபடியாக ரஜினி ‘தலைவர் 171’ படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். அதே சமயம் தலைவர் 171 படம் தொடர்பான அடுத்த அடுத்த அப்டேட்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன்படி தலைவர் 171 படத்தில் நடிகர் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரஜினியின் 171-வது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில், படத்தின் பெயர் ‘கூலி’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ரஜினிக்கு வில்லனாக நடிகர் மைக் மோகன் நடிக்கவுள்ளதாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. கூலி படத்தின் டீசர் வெளியானதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் #Coolie என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டாகி வருகிறது.

From around the web