ஜெயிலர் 2 க்கு தயாராகிவிட்டார் ரஜினிகாந்த்! தொடங்கியது படப்பிடிப்பு !!

 
Rajini Jailer

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தெரிகிறது. ரஜினிகாந்தின் அடுத்த படமான ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம் பெரும் வெற்றியைப். முத்துவேல் பாண்டியன் என்ற சிறை அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்திருந்தார்.ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து அதன் அடுத்த பாகம் ‘ஜெயிலர் 2’ என்ற பெயரில் உருவாகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். பிரபல  தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் நேற்று தொடங்கியுள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு 15 நாட்கள் நடக்க இருக்கின்றன,

முன்னதாக ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வீடியோ, வரவேற்பைப் பெற்றது. அதில் நடித்தது ரஜினியா அல்லது டூப்பா என்ற பரபரப்பான விவாதம் எழுந்த நிலையில், படப்பிடிப்பு வீடியோவை வெளியிட்டு உண்மையை நிலைநாட்டினார்கள்.