மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ரஜினிகாந்த்.. வைரல் வீடியோ!
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்கோளாறு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் 10ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதனை தொடர்ந்து கூலி என்ற படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்திற்கு கடந்த 30-ம் தேதி மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர்.
அவருக்கு அடிவயிற்றில் உள்ள ரத்த நாணங்களில் ஏற்பட்ட கட்டி காரணமாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், இதையடுது்து சில மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த ரஜினிகாந்தின் உடல் நலம் தேறியதால், அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, சில நாட்கள் மருத்துவமனையில் இருந்த ரஜினிகாந்த், நேற்று (அக். 3) இரவு 11 மணியளவில் அவரது காரில் போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு திரும்பியிருக்கிறார்.
தலைவர் @rajinikanth வீடு திரும்பினார் 🙏❤️✨ 🤘 #ThalaivarISBack #SuperstarRajinikanth #Vettaiyanisback pic.twitter.com/BNmvzA8XNG
— Naveen khan (@1992_naveen) October 4, 2024
நடிகர் ரஜினிகாந்த், நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முகத்தில் மாஸ்க் உடன் காரில் அமர்ந்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த், வீடியோ எடுப்பவரை பார்த்தபின், கையெடுத்து கும்புடுகிறார். இதை பார்த்த நெட்டிசன்கள், ரஜினிகாந்த் பூரண உடல் நலம் பெற வேண்டிய பிரார்த்தனை செய்வதாக கூறி வருகின்றனர்.