இணையத்தில் வைரலாகும் ‘ரகு தாத்தா’ பட டிரெய்லர்

 
Ragu Thatha

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘ரகு தாத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா’ உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் நேரடியாக தமிழில் முதன்முறையாக தயாரித்துள்ள படம் ‘ரகு தாத்தா’. பெரும் வரவேற்பை பெற்ற ‘தி ஃபேமிலி மேன்’ வெப் தொடருக்கு கதை எழுதிய சுமன் குமார் எழுதி இயக்கியுள்ளார். 

இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒய் யாமினி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

Ragu Thatha

படத்தின் முதல் பாடலான 'அருகே வா' பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது. அதேபோல், இப்படத்தின் 2-ம் பாடலான `ஏக் காவ் மே' என்ற பாடல் நேற்று வெளியானது. இப்பாடலை ஷான் ரோல்டன் பாடியுள்ளார். இந்நிலையில், ரகு தாத்தா படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் அடுத்த மாதம் 15-ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரெய்லர் எப்படி? “பொண்ணா அடக்கமா எல்லாம் இருக்க முடியாது” என தொடக்கத்திலேயே சீறுகிறார் கீர்த்தி சுரேஷ். மீண்டும் மீண்டும், ‘பொண்ணா அடக்கமா இரு’ என சொல்லும்போது கொந்தளிக்கிறார். யாருக்கும் கட்டுப்படாத, எல்லாவற்றையும் கேள்வி கேட்கும் வலிமையான கதாபாத்திரமாக கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

இடையில் இந்திக்கு எதிரான போராட்டங்களும், இந்தி பேப்பரை கிழித்தெறியும் நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன. திணிப்புக்கும், அடக்குமுறைக்கும் எதிராக காமெடி டிராமாவாக படம் உருவாகியிருப்பதை டிரெய்லர் உணர்த்துகிறது. இறுதியில் ‘ஏக் காவ்மே ஏக் இசான்’ என கீர்த்தி சுரேஷ் இந்தி கற்றுக்கொள்வதுடன் டிரெய்லர் நிறுவடைகிறது.

From around the web