டைரி இயக்குநர் புதிய படத்தில் ராகவா லாரன்ஸ், எல்வின்.. படப்பிடிப்பு எப்போது?

 
Lawerence

நடிகர் லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்தில் அவரது தம்பி எல்வின் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகின.  இந்தப் படத்தில் அவரது தம்பி எல்வின் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியான. ஆக்ஷன் மற்றும் காமெடி படமாக உருவாக இருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி துவங்கியது.

Lawerence

படத்தின் பூஜை முடிந்து ஒர் ஆண்டு ஆன நிலையில், இது தொடர்பாக வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால் இந்தப் படம் எந்த நிலையில் உள்ளது என்றே தெரியவில்லை. இந்த நிலையில் தற்போது மற்றொரு படத்தில் ராகவா லாரன்ஸும் அவர் தம்பியும் இணைந்து நடிக்க உள்ளனர்.

அருள்நிதி கதாநாயகனாக நடித்த ‘டைரி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இன்னாசி பாண்டியன். இதில் பவித்ரா மாரிமுத்து, சாம்ஸ், ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடித்திருந்தனர். சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படமான இது, வரவேற்பைப் பெற்றது. இதை தனது பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ். கதிரேசன் தயாரித்திருந்தார். அவர் தயாரிப்பில் இன்னாசி பாண்டியன் மீண்டும் படம் இயக்க இருப்பதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

Lawerence

இந்த நிலையில், இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸும் அவர் தம்பி எல்வினும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு வரும் 15-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. 40 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

From around the web