பட்டையை கிளப்பும் ‘புஷ்பா 2’ டீசர்.. ரசிகர்கள் கொண்டாட்டம்

 
Puspha 2

அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா 2 படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

2021-ல் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகி மெகா ஹிட்டான படம் புஷ்பா. பான் இந்தியா அளவில் வெளியாகி 500 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பாகுபலி படத்துக்கு பிறகு பல மொழிகளில் ஹிட்டான தெலுங்கு படம் என்ற பெயரையும் புஷ்பா திரைப்படம் பெற்றது. அப்படத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

Puspha 2

இந்த படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜுன், சுகுமார் கூட்டணியில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. புஷ்பா தி ரைஸ் (புஷ்பா 2) என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அல்லு அர்ஜுன் இன்று தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். புஷ்பா 2 படக்குழு சார்பாக அல்லு அர்ஜுனுக்கும் அவரது ரசிகர்களுக்கும் பிறந்தநாள் பரிசாக படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. ஒரு நிமிடம் வரை ஓடும் டீசரில் ஆக்‌ஷன் காட்சிகள் பொறி பறக்கும்படி இருக்கின்றன. தற்போது புஷ்பா 2 டீசர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

From around the web