புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ரசிகர்கள் உற்சாகம்!

 
Pusha 2

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் ‘புஷ்பா 2’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன், நடிகை ராஷ்மிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாக்கி வரும் படம் ‘புஷ்பா 2’. கடந்த 2021-ம் ஆண்டு புஷ்பா படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சக்கைபோடு போட்டது. வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் புஷ்பா முதல் பாகம் மிக பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் அல்லு அர்ஜுனின் ஸ்டைல் இணையத்தில் வீடியோவாகவும், ரீலிஸ்களாகவும் செம ட்ரெண்டிங்கில் இருந்து வந்தது.

Pushpa 2

இதையடுத்து புஷ்பா 2 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று ஏப்ரல் மாதம் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டது. அந்த டிரெய்லரில், சிறையில் இருந்து தப்பிச்சென்ற புஷ்பாவை போலீசார் சுட்டுகொன்று விட்டனர் என்றும், புஷ்பா வெளிநாட்டுக்கு தப்பி சென்று இருக்கலாம் என்றும் செய்தி பரவி வருகிறது. இதனால், புஷ்பாவின் ஆதரவாளர்கள் கடைகளை அடித்து நொறுக்கி வருகின்றனர்.

ஆனால், புலிக்காக வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவில் புஷ்பா இருப்பதை பார்த்த பொதுமக்கள் புஷ்பா உயிருடன் தான் இருக்கிறார் என்று ஆனந்த கூத்தாட்டம் போடுகிறார். இந்த டிரெய்லர் வெளியான போதே படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் ஒரு சில பிரச்சனையால் படத்தின் வெளியீடு தள்ளிக்கொண்டே போனது.


இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. புஷ்பா 2 படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சுதந்திர தினம் அன்று வெளியாகும் என அறிவித்துள்ளது. புஷ்பா 2 படம் பார்க்க இன்னும் ஒரு வருஷம் காத்து இருக்கனுமா என சில ரசிகர்கள் நொந்து போனார்கள். இன்னும் சிலரோ படம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா இருக்கும் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். புஷ்பா 1 படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

From around the web