பிரபல இளம் நடிகர்களுக்கு தடை... தயாரிப்பாளர் சங்கம் அதிரடி.. ரசிகர்கள் அதிர்ச்சி!

 
sreenath-bhasi-shane-nigam

பிரபல நடிகர்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்து இருப்பது மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஷேன் நிகம். இவர், ஆரம்ப காலத்தில் சில படங்களில் துணை கதாபத்திரமாக நடித்து வந்த நிலையில், 2013-ம் ஆண்டு வெளியான நீலகாஷம் பச்சைக்கடல் சுவாச பூமி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் கிஸ்மத், கும்பலாங்கி நைட்ஸ், இஷ்க், வெயில் உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்து பிரபலமானார்.

இவரது நடிப்பில் அண்மையில் வெளியான 'கொரோனா பேப்பர்ஸ்' என்ற திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போதும் இவர் கைவசம் சுமார் 5-க்கும் மேற்பட்ட படங்களை வைத்துள்ளார். இதனிடையே இவர் படப்பிடிப்பின்போது அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர் மீது தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் புகார் அளித்தனர்.

sreenath-bhasi-shane-nigam

அதேபோல் மற்றொரு பிரபல நடிகரான ஸ்ரீநாத் பாசி என்பவர் மீதும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இவர், கும்பலாங்கி நைட்ஸ், ஆகாச கங்கா 2, டிரான்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரும் படப்பிடிப்பின்போது போதை பொருள் உள்ளிட்டவையை பயன்படுத்தி தகராறு செய்து வந்ததாக புகார் எழுந்தது. இவர் மீதும் பலர் மலையாள திரை சங்கங்களில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற கேரளா திரைப்பட பணியாளர்கள் கூட்டமைப்பு மற்றும் கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கூட்டத்தில் ஷேன் நிகம், ஸ்ரீநாத் பாசி ஆகிய நடிகர்கள் இனி படங்களில் நடிக்கத் தடை விதித்துள்ளது. இது தற்போது மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kerala

இதுகுறித்து அந்த சங்கங்கள் கூறுகையில், “போதைக்கு அடிமையான திரை கலைஞர்களுக்கு சங்கம் ஒருபோதும் ஒத்துழைக்காது. ஷேன் நிகம் மற்றும் ஸ்ரீநாத் பாசி இருவரும் அடிக்கடி போதையில் தாங்கள் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல், சுயநினைவின்றி நடந்து கொள்வதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது. அதுமட்டுமின்றி இருவரும் படப்பிடிப்பின் போது போதையில் இருப்பதும் தெரியவந்தது. இது சக நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இதனால் அந்த 2 நடிகர்களுக்கும் இனி ஒத்துழைப்பு வ்ழங்குவதில்லை என முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்றது.

From around the web