பிதாமகன் பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை மரணம்.. திரையுலகினர் இரங்கல்!

 
VA Durai

பிரபல பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 69.

2000-ல் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான ‘என்னம்மா கண்ணு’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வி.ஏ.துரை. தொடர்ந்து, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு, பிதாமகன், கஜேந்திரா, நாய் குட்டி, காகித கப்பல் போன்ற படங்களை தயாரித்துள்ளார். ரஜினியின் ‘பாபா’ படத்திலும் எக்சிகியூட்டிவ் புரொடியூசராக பணியாற்றியுள்ளார்.

VA Durai

இந்த நிலையில், நீரிழிவு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த வி.ஏ.துரை நேற்று (அக். 2) காலமானார். நீரிழிவு நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்ததாக வீடியோ ஒன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அவர் உடல் மெலிந்து மிகவும் மோசமாக நிலையில் காணப்பட்டார். கடந்த சில வருடங்களாக நீரிழிவு நோயால், தான் அவதிப்பட்டு வருவதாகவும், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற கூட பணம் இல்லாமல் சிரமப்படுவதாகவும் அதில் தெரிவித்திருந்தார்.  

இந்த நிலையில், நேற்று இரவு 9 மணியளவில் உடல் நலம் பாதிக்கப்பட்ட இருந்த வி.ஏ.துரை வீட்டிலேயே காலமானார். இவருக்கு விஜயலட்சுமி, லட்சுமி என்று இரண்டு மனைவிகள் உண்டு. முதல் மனைவிக்கு ஸ்ருதி, சிந்து என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டது. இரண்டாவது மனைவிக்கு கீர்த்தனா என்ற ஒரு மகள் இருக்கிறார். 

RIP

வி.ஏ.துரைக்கு சர்க்கரை நோய் இருந்ததால், அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஒரு கால் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் மருத்துவமனையில் இருக்கும்போது நடிகர் சூர்யா, கருணாஸ் உள்ளிட்டோர் பண உதவி செய்தனர். தற்போது இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

From around the web