காதலருடன் சிட்னியில் பிரியா பவானி சங்கர்.. வைரல் புகைப்படங்கள்!

 
Priya Bhavani Shankar

பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் தனது காதலனுடன் ஆஸ்திரேலியாவில் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார்.

சின்ன திரையில் செய்தி வாசிப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் பிரியா பவானி சங்கர். அவருக்கு சின்னதிரையில் இருக்கும் போதே இணையத்தில் ஏராளமான ரசிகர்கள் உண்டு. இதில் கிடைத்த வரவேற்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட இவர், விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து பிரபலமானார்.

அந்த சீரியல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற, வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்த பிரியா பவானி சங்கர், மேயாத மான் படத்தில் கதாநாயகியான நடித்திருந்தார். இதையடுத்து கார்த்திக் நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின் எஸ் .ஜே.சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண் விஜய்யுடன் மாபியா, ஒ மணப்பெண்ணே, பிளட் மணி, ஹாஸ்டல் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

Priya Bhavani Shankar

சீனியர் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஏராளமான படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியான நடிகையாக இருக்கிறார். தற்போது இவர் பீமா, டிமாண்டி காலனி 2 போன்ற படங்கள் உள்ளன. இது மட்டுமில்லாமல், பிரபல தெலுங்கு நடிகர் சத்யதேவ் கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்திலும் கமிட்டாகி உள்ளார்.

ராசியான நடிகை என பெயர் எடுத்த பிரியா பவானி சங்கர், ஏராளமான படங்களை கையில் வைத்திருக்கும் போதும் சம்பளத்தை ஏகத்திற்கும் உயர்த்தாமல், தயாரிப்பாளர் தரும் சம்பளத்திற்கு, பேரம் பேசாமல் புன் சிரிப்போடு வாங்கிக் கொள்வதால், பிரியா பவானி சங்கர் பல தயாரிப்பாளர்களின் முதல் சாய்ஸாக உள்ளார்.

இந்நிலையில், பிரியா பவானி சங்கர் தனது காதலர் ராஜவேலுவுடன் சிட்னியில் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார். இவர்கள் இருவரும் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ள பிரியா பவானி சங்கர், சிட்னி எனது இரண்டாவது வீடு, இங்கு மக்கள் எவ்வளவு அன்பானவர்கள் என்பதை கவனித்தேன். ஏறக்குறைய 6 ஆண்டுகளுக்குப் பிறகு, இதயம் நிறைந்த அன்புடனும் நன்றியுடனும், நான் இந்த நகரத்திற்கு மீண்டும் வந்திருக்கிறேன். இங்கு நான் நீண்ட நடைப்பயணத்தை மேற்கொண்டேன், காபி குடித்து, பேசினேன், சிரித்தேன், அங்கே அமைதியாக உட்கார்ந்தேன், வாழ்ந்தேன். இந்த தருணம் மற்றும் பிரபஞ்சம் எங்களுக்கு ஒருவருக்கொருவர் வழங்கியதற்கு நன்றி என பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவிற்கு லைக்குகள் மலைபோல் குவிந்து வருகிறது.

From around the web