விமான நிலையத்தில் பிரபாஸின் கன்னத்தில் அறைந்த ரசிகை.. வைரல் வீடியோ!

பிரபல நடிகர் பிரபாஸை பெண் ரசிகை ஒருவர் கன்னத்தில் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2002-ல் வெளியான ‘ஈஸ்வர்’ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் பிரபாஸ். அதனைத் தொடர்ந்து வெளியான ‘வர்ஷம்’ படத்தின் மூலம் பிரபலமானார். மிர்ச்சி, முன்னா, டார்லிங், மிஸ்டர். பெர்ஃபெக்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது வெற்றிப் படங்கள். இதனைத் தொடர்ந்து ராஜமௌலி இயக்கிய ‘பாகுபலி’ படத்தின் மூலம் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானார்.
கடந்த ஜூன் மாதம் வெளியான ‘ஆதிபுருஷ்’ படத்திற்குப் பிறகு நடிகர் பிரபாஸ் தற்போது ‘சலார்’ படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 22ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ‘கல்கி 2898 ஏடி’ படத்திலும் நடித்து வருகிறார். பிரம்மாண்டமான படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, பசுபதி என பலரும் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ரசிகை ஒருவர் ஏர்போர்ட்டில் பிரபாஸூடன் புகைப்படம் எடுத்து விட்டு செல்லும் போது அவரைப் பார்த்த உற்சாகத்தில் பிரபாஸை விளையாட்டாக கன்னத்தில் அடித்துள்ளார். பிரபாஸூம் அவரது உற்சாகத்தைப் புரிந்து கொண்டு சிரித்துக் கொண்டே இதை ஏற்றுக்கொண்டுள்ளார். கடந்த 2019 ம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.