மார்பகம் குறித்து ஆபாச கமெண்ட்.. எதிர்நீச்சல் நடிகை கனிகா கொடுத்த செருப்படி பதில்

 
Kaniha

மார்பகம் குறித்து ஆபாசமாக கருத்தை பதிவிடுபவர்களுக்கு நடிகை கனிகா சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

2002-ல் சுசி கணேசன் இயக்கத்தில் வெளியான ‘ஃபைவ் ஸ்டார்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிகமுகமானவர் நடிகை கனிகா. காதல் திரைப்படமான இப்படத்தில், நடிகர் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் கனிகா. இதையடுத்து, எதிரி, ஆட்டோகிராப் போன்ற திரைப்படத்தில் நடித்தார். மேலும், அஜித்துடன் சேர்ந்து வரலாறு படத்தில் நடித்துள்ளார்.

பின்னணி பாடகியான கனிகா, பல நடிகைகளுக்கு குரலும் கொடுத்து இருக்கிறார். சச்சின் திரைப்படத்தில் ஜெனிலியாவுக்கும், அன்னியன் திரைப்படத்தில் சதாவுக்கும், சிவாஜி படத்தில் ஸ்ரேயாவுக்கு குரல் கொடுத்ததுள்ளார். இவர் தமிழ் திரைப்படங்கள் மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் மலையாள கரையோரம் சென்ற கனிகா அங்கு கணிசமான திரைப்படங்களில் நடித்தார்.

Kaniha

இதையடுத்து, பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் போதே 2008-ம் ஆண்டு சியாம் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த கனிகா, இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து, நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ படத்தில் நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள கனிகா, பெண்களின் மார்பகம் பற்றி சமூக வலைத்தளத்தில் படு மோசமாக கருத்துக்களை சிலர் பதிவிட்டு வருகின்றனர். எதற்காக இப்படியான கருத்துக்களை பதிவிடுகிறார் என்று எனக்கு புரியவில்லை. உங்கள் வீட்டு பெண்களிடம் இருக்கக்கூடிய அதே விசயம் தான் எனக்கும் இருக்கிறது. ஏதேனும் புதிதாக இல்லை வித்தியாசமாக இருக்கிறதா? என் மார்பகம் பெரிதாக இருக்க என் ஹார்மோன் மாற்றங்கள் தான் காரணம். திருமணமாகி கர்ப்பமான, குழந்தைக்கு பாலூட்டும் பெண்களுக்கு இப்படித்தான் இருக்கும். இது எனக்கு மட்டுமல்ல அனைத்து பெணகளுக்கும் அப்படித்தான்.

Ethirneechal

பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவதை போன்று எனக்கும் ஏற்பட்டு என் மார்பகமும் பெரிதாக இருக்கிறது. இதை, அருவருப்பான வார்த்தைகளால் மிகவும் மோசமான கருத்துக்களை பதிவிடுவதை பார்க்கும் போது, நீங்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்று யோசிக்க தோன்றுகிறது. அது மட்டுமில்லாமல், குழந்தை பிறந்த பிறகும், கவர்ச்சி ஆடை தேவையா என்று சிலர் கேட்கிறார்கள். எனக்கு பிடித்த ஆடையை நான் சுதந்திரமாக போடுகிறேன். என்ன ஆடையணிந்தாலும் எப்படி பார்க்க வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. என் மகனுக்கு பெண்களை எப்படி பார்க்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்து இருக்கிறேன் என பதிலளித்துள்ளார்.

From around the web