பிரபல சீரியல் நடிகை மரணம்.. இந்தி சீரியல் சோகம்!

 
Kavita Choudary

பிரபல சீரியல் நடிகை கவிதா சௌத்ரி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 67.

1989-ம் ஆண்டு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘உடான்' எனும் தொடர் மூலம் பெரும் ரசிகர்களை இன்றளவும் கொண்டுள்ளவர் நடிகை கவிதா சௌத்ரி. 90-களில் இந்த சீரியல் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த சீரியலில், கல்யாண் சிங் எனும் கதாபாத்திரத்தில் போலீசாக நடித்த கவிதா, அக்கதாபாத்திரமாக வாழ்ந்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். மேலும் 90களின் பிரபல ‘சர்ஃப் எக்ஸல்’ விளம்பரங்களில் ‘லலிதா ஜி’ எனும் கதாபாத்திரத்திலும் தோன்றி, அன்றைய தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியிலும் பாப்புலரானார்.

Kavita Choudary

இந்நிலையில், கவிதா நேற்று பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ள பார்வதி தேவி மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு ஏராளமான 90களின் சினிமா மற்றும் சீரியல் ரசிகர்கள் இணையத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகை கவிதா செளத்ரியின் மறைவு குறித்து இன்ஸ்டாகிராமில் இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்தி, “இந்தச் செய்தியை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் போது என் இதயம் கனக்கிறது. நேற்றிரவு, வலிமை, உத்வேகம் மற்றும் கருணை ஆகியவற்றின் விளக்கை இழந்தோம் 70கள் மற்றும் 80களில், அவர் டிடி தொலைக்காட்சியில் உடான் தொடரின் முகமாகவும், 'சர்ஃப்' விளம்பரம் மூலமாகவும் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார்.

Kavita Choudary

"கவேதாஜியை ஒரு உதவி இயக்குனருக்கான நேர்காணலுக்காக வெர்சோவாவில் உள்ள அவரது தாழ்மையான இல்லத்தில் நான் முதன்முதலில் சந்தித்தேன். பெண்களின் கனவுகளை, குறிப்பாக இந்திய காவல் சேவைகளில் தொடர ஊக்கமளித்தது. அவள் இப்போது வலியிலிருந்து விடுபட்டிருக்கிறாள் என்பதை அறிந்து நான் ஆறுதல் அடையும் போது, ​​அவள் இனிமேல் என் அழைப்புகளை எடுக்க மாட்டாள் என்பதை உணர்ந்து என் இதயம் உடைகிறது. அவள் ஆன்மா நித்திய சாந்தி அடையட்டும் .” என்று குறிப்பிட்டுள்ளனர்.

From around the web