பிரபல ஆபாச பட நடிகை மர்ம மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

 
Thaina Fields

பெரு நாட்டைச் சேர்ந்த ஆபாச பட நடிகை தைனா ஃபீல்ட்ஸ் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடான பெருவை சேர்ந்தவர் ஆபாச பட நடிகை தைனா ஃபீல்ட்ஸ் (24). இவர், வயது வந்தோருக்கான ஆபாச படங்களில் நடித்து இளம் வயதிலேயே மிகவும் பிரபலமானார். ஆபாச திரைத் துறையில் பாலியல் அத்துமீறல் நடப்பதாக தைனா பீல்ட்ஸ் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அந்த துறையில் தான் சந்தித்த பிரச்சனைகள் குறித்து பேசிய அவர், பாலியல் ரீதியாக தான் துன்புறுத்தப்பட்டதாகவும் கூறினார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொதுவாக, போர்னோ திரைத் துறைக்குப் பின்னால் நடிகைகள் அனுபவிக்கும் பாலியல் சித்திரவதைகள் பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை. அதை அம்பலப்படுத்திய இவர், “என்னை அழைப்பவர்களில் பெரும்பாலானவர்கள், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைப்பார்கள். இதையெல்லாம் கடந்து நான் வீட்டுக்குச் சென்றவுடன் குளித்துவிட்டு, மனமுடைந்து அழுவேன். பல சமயங்களில் எனக்கு அப்படி நடந்திருக்கிறது.

Thaina Fields

இந்தச் சமூகத்தில் ஒரு பெண்ணாக வாழ்வது மிகவும் கஷ்டமானது. அதைவிட அடல்ட் கன்டென்ட் கிரியேட்டராக இந்தச் சமூகத்தில் வாழ்வது என்பது மிகக் கொடுமையானது” என வெளிப்படையாக பேசியது தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று சர்வதேச அளவில் பேசுபொருளானது.

இந்த நிலையில், பெரு நாட்டின் ட்ரூஜில்லோ நகரில் உள்ள வீட்டில் நடிகை தைனா ஃபீல்ட்ஸ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தற்போது அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது மரணத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஃபீல்ட்ஸ் இணைந்து பணியாற்றிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மில்க்கி பெருவும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது.

Thaina Fields

அதாவது, “இந்த கெட்ட கனவிலிருந்து யாராவது எங்களை எழுப்புவார்கள் என்று நம்புகிறோம்; நீங்கள் எப்போதும் எங்கள் இதயங்களில் இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்க எங்களை அனுமதித்ததற்கு நன்றி” எனத் தெரிவித்திருக்கிறது. மேலும், தைனா ஃபீல்ட்ஸ் மறைவு குறித்து அவரது தோழியும், நடிகையுமான அலெஜான்ட்ரா ஸ்வீட் தனது வேதனையுடன் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

From around the web