பிரபல பாடகி தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் திரையுலகம்!

 
Mallika Rajput

பிரபல பின்னணி பாடகியும் நடிகையுமான மல்லிகா ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2014-ம் ஆண்டு கங்கனா ரனாவத் நடித்த குற்ற நகைச்சுவை திரைப்படமான ‘ரிவால்வர் ராணி’ படத்தில் துணை வேடத்தில் நடித்தவர் மல்லிகா ராஜ்புத். நடிகை மட்டுமில்லாமல் இவர், நடிகை ஷான் எழுதிய யாரா துஜே பாடலுக்கான இசை வீடியோவிலும் தோன்றினார். 2016ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். அதன் பின், அந்த அரசியல் அமைப்பில் இருந்து வெளியேறினார்.

அதன் பிறகு, 2022-ம் ஆண்டு உத்தரபிரதேச பாரதிய சவர்ண சங்கத்தின் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் பாடகி,நடிகை மட்டுமில்லாமல் இவர் ஒரு கதக் நடனக் கலைஞராக ஆவர். மேலும் இவர், பல கவிதைகள் எழுதி இருக்கிறார்.

Mallika Rajput

விஜயலட்சுமி என அழைக்கப்படும் பாடகியும் நடிகையுமான மல்லிகா ராஜ்புத், உத்திர பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் நேற்று (பிப். 13) அவரது வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து, அவரது பெற்றோர் அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பாடகியின் வீட்டிற்கு சென்று அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, மல்லிகாவின் தாய் சுமித்ரா சிங் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், நாங்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால், மல்லிகாவின் மரணம் எப்போது நடந்தது என்று தெரியவில்லை. கதவு உள் பக்கமாக மூடப்பட்டு இருந்தது. மேலும் விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. நான் நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால், ஜன்னல் வழியாகப் பார்த்தேன், அப்போது அவள், தூக்கில் தொங்கியபடி இருந்தாள். உடனே நான் என் கணவரையும் மற்றவர்களையும் அழைத்தேன் என்று கதறி அழுதபடி கூறியுள்ளார்.

RIP

இதையடுத்து பேசிய கோட்வாலி போலீசார், ஸ்ரீராம் பாண்டே, 35 வயதான பாடகியின் உடல் கோட்வாலி காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட சீதகுண்ட் பகுதியில் உள்ள அவரது வீட்டின் அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இது தற்கொலைப் போலத்தான் தெரிகிறது. இருப்பினும் இதுகுறித்து, உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகுதான் எதையும் உறுதியாக சொல்ல முடியும் என்றார்.

இவரது மறைவு இவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இவரது மறைவுக்கு இணையத்தின் வழியாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web