கார்த்தியுடன் இணையும் பிரபல சீரியல் நடிகை.. யார் தெரியுமா?

 
Karthi

நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்தியின் 25வது படமான ‘ஜப்பான்’ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி தனது 26வது படத்தில் நடித்துள்ளார். இதற்கு பிறகு தற்போது ‘96’ பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி தனது 27வது படத்தில் நடிக்க உள்ளார்.

Karthi

இந்த படத்தில் கார்த்தி உடன் நடிகர் அரவிந்த் சாமி இணைந்து நடிக்கின்றார் என்றும் இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்தி 27வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கும்பகோணத்தில் தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ’ஈரமான ரோஜாவே’ என்ற சீரியல் நடிகை சுவாதி, நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Karthi

ஏற்கனவே பிரியா பவானி சங்கர், வாணி போஜன் உட்பட பல சீரியல் நடிகைகள் வெள்ளி திரையிலும் ஜொலித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு சீரியல் நடிகை வெள்ளி திரைக்கு வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் முதல் படமே கார்த்தியுடன் ஜோடி என்பது அவருக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது.

From around the web