பிரபல சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம்.. வைரலாகும் நிச்சியதார்த்த புகைப்படங்கள்!

 
Swetha

பிரபல சின்னத்திரை நடிகை ஸ்வேதாவுக்கு அவரது நீண்டகால நண்பருடன் நிச்சியதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடிகையாக வலம் வருபவர் ஸ்வேதா கெல்கே. அவரது முதல் தொடர் மதுமாசம் ஆகும். இதில் துணை வேடத்தில் நடித்தார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் வானத்தைப் போல என்ற தமிழ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

Swetha

இந்த சீரியலில் நடித்து வந்த இவர், திடீர் என விலகி, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘கண்ணெதிரே தோன்றினாள்’ தொடரில் தற்போது நடித்து வருகிறார். 27 வயதாகும் இவருக்கும், நீண்டகால நண்பரான மதுஷங்கர் கவுடா என்பவருக்கும் கடந்த 10-ம் தேதி மிக பிரமாண்டமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

கல்லூரியில் இவர் படித்து கொண்டிருக்கும் போதே மது ஷங்கரை காதலித்து வந்த நிலையில், தற்போது இவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

Swetha

தற்போது தன்னுடைய நிச்சயதார்த்த புகைப்படங்களை ஸ்வேதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web