பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

 
Gopinath Rao

மைக்கேல் மதன காமராஜன் படத்தில் வரதுகுட்டியாக நடித்திருந்த நடிகர் கோபிநாத் ராவ் காலமானார்.

1990-ல் கமல்ஹாசன் நடிப்பில் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான ‘மைக்கேல் மதன காமராஜன்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கமல்ஹாசன் இந்த படத்தில் நான்கு வேடங்களில் நடித்திருக்கும் நிலையில் காமேஸ்வரன் என்ற கேரக்டரின் உதவியாளராக கோபிநாத் ராவ் என்பவர் வரதுக்குட்டி என்ற வேடத்தில் நடித்திருப்பார்.

Gopinath Rao

இவர் இந்த படத்தில் காமெடியில் அசத்தியிருப்பார் என்பதும் காமேஸ்வரன் வரும் காட்சிகளில் எல்லாம் இவரது காமெடியும் சூப்பராக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கோபிநாத் ராவ் நேற்று காலமானார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த கிரேசி மோகனின் பல நாடகங்களில் கோபிநாத் ராவ் நடித்துள்ளதாக கிரேசி மோகன் சகோதரர் மது பாலாஜி வீடியோ ஒன்றை வெளியிட்டு அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மறைந்த கோபிநாத் ராவ் நல்ல காமெடி சீன்ஸ் உள்ளவர் என்றும், அவர் எங்கள் டிராமா குரூப்பில் இருந்ததே எங்களுக்கு பெருமை என்றும், கடந்த சில நாட்களாக சர்க்கரை நோய் உள்ளிட்ட சில நோய்களால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று காலமானார் என்றும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

மேலும் காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சதீஷ் தனது சமூக வலைதளத்தில் கோபிநாத் ராவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web