பிரபல குணச்சித்திர நடிகர் அருள்மணி திடீர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி!

 
Arulmani

நடிகரும், அதிமுகவின் நட்சத்திர பேச்சாளருமான அருள்மணி மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 65.

குணசித்திர நடிகராக தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்தவர் அருள்மணி. அழகி, தென்றல், சிங்கம், லிங்கா, தாண்டவக்கோனே மற்றும் தர்மசீலன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிப்பில் கவனம் செலுத்தி வந்த போதும் இயக்குநர் பயிற்சி பள்ளி ஒன்றையும் இவர் நடத்தி வந்தார். அதனால் தமிழ் திரை உலகில் அனைவருக்கும் நன்கு நன்கு அறிமுகமானவர்.

Arulmani

சினிமாவை தாண்டி அரசியலில் அதிக ஆர்வத்தை செலுத்தி வந்த அருள்மணி, அதிமுகவிற்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். கடந்த 10 நாட்களாக தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு பல ஊர்களுக்கு சென்று பிரச்சாரம் செய்து வந்தார் அருள்மணி. நேற்று சென்னை திரும்பிய அவர், சற்று ஓய்வெடுத்து வந்தார்.

இந்த நிலையில், தீடிரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவரது குடும்பத்தினர் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனின்றி அவர் நேற்று இரவு 9.30 மணிக்கு உயிரிழந்தார்.  


சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு திரையுலகினர் மற்றும் ஏராளமான ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web