பிரபல நடிகை மீரா நந்தனுக்கு திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் புகைப்படங்கள்!

 
Meera Nandan

பிரபல நடிகை மீரா நந்தனுக்கு திடீரென நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

2008-ல் வெளியான ‘முல்லா’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மீரா நந்தன். மலையாள படங்களில் நடித்து வந்த இவர், 2009-ல் வெளியான ‘வால்மீகி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து அய்யனார், சண்ட மாருதம், காதலுக்கு மரணமில்லை, நேர்முகம், சூரிய நகரம் உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

Meera Nandan

மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ள இவர், சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். இதை விமர்சித்த ரசிகர்களுக்கு ‘துபாயில் இருக்கும் நான் அதுமாதிரி தான் உடை அணிவேன்’ என்று பதிலடியும் கொடுத்தார். மீரா நந்தனுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் மாப்பிள்ளை தேடினர்.

இந்த நிலையில், திருமண தகவல் மையம் மூலம் லண்டனில் கணக்காளராக வேலை பார்க்கும் ஸ்ரீஜு என்பவரை தேர்வு செய்தனர். மீரா நந்தனும், ஸ்ரீஜும் துபாயில் சந்தித்து பேசினர். இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்து போனது. இதையடுத்து மீரா நந்தன், ஸ்ரீஜு திருமண நிச்சயதார்த்தம் கேரளாவில் உள்ள கொச்சியில் நடந்தது.

இது காதல் திருமணம் இல்லை, பெற்றோர்கள் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம் என்று கூறி நிச்சயதார்த்த புகைப்படங்களை மீரா நந்தன் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். திருமண தேதியை விரைவில் அறிவிக்க உள்ளனர்.

From around the web