கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை.. காஸ்ட்லி கார்கள் மோதலால் இருவர் பலி.. பகீர் வீடியோ!

பிரபல பாலிவுட் நடிகை காயத்ரி ஜோஷி தனது கணவருடன் காரில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கிய அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் ரசிகர்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
2000-ம் ஆண்டில் ஃபெமினா மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் பட்டத்தை வென்றவர் காயத்ரி ஜோஷி. அதன் பிறகு 2004-ல் ஆசுதோஷ் கோவாரிக்கரின் ‘ஸ்வேட்ஸ்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்தார். இப்படத்தில் நடித்ததற்காக அதிக பாராட்டுகளைப் பெற்ற போதிலும், காயத்ரி பாலிவுட்டில் இருந்து திடீரென வெளியேறினார்.
பின்னர் 2005-ல் தொழிலதிபர் விகாஸ் ஓபராய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது தனது கணவர் விகாஸ் ஓப்ராயுடன் இத்தாலியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், இத்தாலியில் நடந்த ஒரு சூப்பர் கார் டூரில் இருவரும் பயணம் மேற்கொண்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து நடந்தது. சம்பவ இடத்தில் பல கார்கள் மோதிக் கொண்டன.
ஃபெர்ராரி காரில் பயணித்த ஒரு தம்பதி அங்கு சென்ற லம்போர்கினி காரை வேகமாக முந்த முயற்சித்தனர். அப்போது அருகில் பயணித்த வேனில் அவர்களுடைய கார் மோதி இந்த விபத்து நடந்தது. அந்த பெர்ராரி கார் தீப்பிடித்து அதில் பயணம் மேற்கொண்ட தம்பதி இறந்துவிட்டனர்.
அவர்கள் மார்க்கஸ் க்ராடலி, மெலிஸா க்ராடலி என தெரியவந்துள்ளது. இருவருக்கும் வயது முறையே 67, 63 ஆகும். இந்த விபத்தில் கணவருடன் காரில் சென்று கொண்டிருந்த நடிகை காயத்ரி ஜோஷி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவருக்கு சிறு காயங்களே ஏற்பட்டன.
பிரபல நடிகைக்கு விபத்து#GayatriJoshi #accident pic.twitter.com/0YnGIEbDVx
— A1 (@Rukmang30340218) October 4, 2023
இந்த விபத்து குறித்து நடிகை காயத்ரி கூறுகையில் கடவுளின் அருளால் தானும் தனது கணவர் ஓபராயும் பிழைத்துக் கொண்டதாகவும் தற்போது நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்து நடந்த இடம் சர்டியானாவின் கிராமப்புற சாலையாகும். உயிரிழந்த தம்பதி ஸ்விட்சர்லாந்தை சேர்ந்தவர்கள். சூப்பர் கார் டூர் நிகழ்வில் இந்த விபத்து நடந்தது. சூப்பர் கார் டூர் என்றால் டியூலடாவிலிருந்து ஆல்பியா வரை விலைமதிப்புள்ள கார்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியாகும்.