பூஜா ஹெக்டே தற்கொலை முயற்சி..? வைரலான ட்வீட்டால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
Pooja Hedge

நடிகை பூஜா ஹெக்டே தற்கொலைக்கு முயன்றதாக பிரபல விமர்சகர் பதிவிட்டது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய உள்ளது.

2012-ல் வெளியான ‘முகமூடி’ என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானாவர் பூஜா ஹெக்டே. அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் போகவே தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வந்தார். அதன்பின், 2014-ல் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘அல வைக்குந்தபுரமுலோ’ படத்துக்கு பிறகு இந்திய அளவில் மிகவும் பிரபலமானார்.

Pooja Hedge

பிரபாஸுக்கு ஜோடியாக ராதே ஷ்யாம், விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட், சிரஞ்சீவி, ராம் சரண் இணைந்து நடித்த ஆச்சாரியா, சல்மான் கான் ஜோடியாக கிசி கா பாய் கிசி கி ஜான் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது அல வைக்குந்தபுரமுலோ படத்துக்கு பிறகு மீண்டும் திரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துவருகிறார்.

இந்த நிலையில் பூஜா ஹெக்டே கடந்த சில வாரங்களாக மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் பிரபல திரை விமர்சகர் உமர் சந்து ட்வீட் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.


அவர் ட்விட்டர் பதிவில், “கடந்த 16-ம் தேதி மதியம் நடிகை பூஜா ஹெக்டே தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவரது குடும்பத்தினர் அவரை காப்பாற்றினார்கள். முழு விவரங்கள் விரைவில் சொல்கிறேன். அவரது சகோதரரின் மூலம் கிடைத்த தகவலின் படி, அவர் கடந்த 2 வாரங்களாக கடுமையான மன அழுத்தத்தில் இருந்தார்” என கூறியுள்ளார். இவரது இந்த பதிவினால் திரையுலகத்தினர் பேரதிர்ச்சி அடைந்தனர்.

From around the web