வெளியானது ‘பொம்மை’ பட டிரெய்லர்.. ஜூன் 16-ம் தேதி ரீலிஸ்!!

 
Bommai Bommai

ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்துள்ள ‘பொம்மை’ படத்தின் 2வது டிரெய்லர் வெளியாகியுள்ளது.

அழகிய தீயே, பொன்னியின் செல்வன், மொழி, அபியும் நானும் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ராதாமோகன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘பொம்மை’. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர்.

Bommai

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது.

இப்படம் வருகிற 16-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இதனால் இப்படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது பொம்மை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டிரெய்லரை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டார்.  சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடலான ’முதல் முத்தம்’ வெளியாகி இருந்தது. இதனால் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியது.

அந்த வகையில், தற்போது பொம்மை படத்தின் இரண்டாம் டிரெய்லர் இன்று வெளியானது. படத்தின் டிரெய்லரை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டிருந்தார். சைக்கோ த்ரில்லராக இந்த பொம்மை படம் உருவாக்கியுள்ளது. மேலும் இந்த டிரெய்லரில் எஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி சங்கர் இடையேயான லிப்லாக் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இதுவரை ஹோம்லி வேடங்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர், முதன்முறைய லிப்லாக் காட்சியில் நடித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

From around the web