விடாமுயற்சியும் விஜய் - த்ரிஷாவும்! வச்சி செய்யும் நெட்டிசன்கள்!!

அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கேசாண்ட்ரா, ஆரவ் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியாகியுள்ளது விடாமுயற்சி திரைப்படம். ப்ரேக்டவுண் ஆங்கிலப்படத்தை தழுவி அசர்பைஜான் நாட்டில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தைப் பற்றி நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் வசூலில் எந்தக் குறையையும் வைக்கவில்லை என்ற தகவலும் வருகிறது.
இந்நிலையில் படத்தில் அஜித்தின் பாத்திரத்தைக் குறிப்பிடும் வகையில் விஜய் - த்ரிஷா படத்துடன் மீம்ஸ் ஒன்று சமூகத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் த்ரிஷாவும் விஜய் யும் பேசிக் கொள்வது போல் கூறியுள்ளதாவது,
”த்ரிஷா: ஏன் சிரிக்கிறே
விஜய்ண்ணா: நீ என்கூட இருக்குறது தெரியாம ஒரு நாள் புல்லா தெருத்தெருவா சுத்திகிட்டு இருக்கான் பத்மபூஷண்”
அஜித்திற்கு வழங்கப்பட்டுள்ள பத்மபூஷண் விருதைக் குறிப்பிட்டு விடாமுயற்சி படத்தில் அஜித்தின் கதாப்பாத்திரத்தையும் த்ரிஷாவின் கதாப்பாத்திரத்தையும் நினைவுபடுத்தும் வகையில் இந்த மீம் சுற்றிக் கொண்டிருக்கிறது