பகீர்.. பேருந்தில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்.. பிரபல நகைச்சுவை நடிகர் அதிரடி கைது!

 
Binu B Kamal

கேரளாவில் பேருந்தில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய மலையாள நடிகர் பினு பி.கமாலை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் அருகே நிலமேல் பகுதியைச் சேர்ந்தவர் பினு பி.கமால். இவர் ஏராளமான டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். இவர் சில மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். இவரது காமெடிக்காகவே, தனி ரசிகர் கூட்டம் இவருக்கு உண்டு. இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி திருவனந்தபுரத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.

அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அவர் அங்கிருந்து தனது வீட்டுக்கு கேரள அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது இவரின் அருகில் 21 வயது இளம்பெண் ஒருவர் அமர்ந்துள்ளார். சிறிது நேரத்தில் பினு கமால் அந்த இளம்பெண்னிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்.

sexual-harrasment

ஒரு கட்டத்தில் பினு கமாலின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் பேருந்தை நிறுத்துமாறு கூச்சலிட்டுள்ளார். பின்னர் அங்கிருந்தவர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறியுள்ளார். அதனைக் கேட்ட பயணிகள் பினு கமாலை பிடிக்க முயற்சித்த போது அவர், பேருந்தில் இருந்து இறங்கி தப்பித்து ஓடியுள்ளார்.

எனினும், அங்கிருந்தவர்கள் பினு கமாலை துரத்திப் பிடித்துள்ளனர். உடனடியாக இது குறித்து அங்கிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பினு கமாலை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

Kerala

அதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் மறுநாள் (அக். 12) அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் கேரளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web