பத்மபூஷண் அஜித்குமார்! பார்த்திபன் என்ன செய்தார் தெரியுமா?

 
Ajith Parthiban

நடிகர் அஜித்குமாருக்கு  குடியரசுத் தலைவர் அளிக்கும் பத்மபூஷண் விருது கிடைத்ததற்கு அனைவரும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிலிருந்து நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷண் கிடைத்துள்ளதற்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பத்மபூஷண் விருது குறித்து அஜித்குமாருக்கு தகவல் தெரிவிப்பதற்கு நடிகர் இயக்குனர் பார்த்திபன் தான் உதவியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து பார்த்திபன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“இன்று மதியம் ஒரு இசை பிரபலம், நண்பர் திரு அஜீத் குமாரின் எண் கேட்க,’ஏன்?” கேட்டேன், மத்திய அரசு அவரை அவசரமாக அணுக விரும்புகிறது. உடனே கொடுங்கள் என்றது அக்குரல். நல்ல விஷயம்தான் என்பதை புரிந்துக் கொண்டு நான் முயற்சித்தேன்.ஒருவழியாக அவரின் P r o திரு சுரேஷ் சந்திராவின் தொடர்பை ஏற்படுத்தினேன். மாலையில் வந்த செய்தி அஜீத் கழுத்துக்கு மாலை என்பது மீறி,’ தலை’க்கு வைர கிரீடம் ஆனது. Congratulations” என்று பதிவிட்டுள்ளார் பார்த்திபன். 

இருவரும் நீ வருவாய் என படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அந்த ஸ்டில்லையும் பதிவில் இணைத்துள்ளார் பார்த்திபன்


 

From around the web