மார்கழியில் மக்களிசையில் குத்தாட்டம் போட்ட பா.ரஞ்சித்! வைரல் வீடியோ

 
Pa.Ranjith Pa.Ranjith

ஓசூரில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற மக்களிசை நிகழ்ச்சியில் பா.ரஞ்சித் குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2012-ல் வெளியான ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பா.ரஞ்சித். தொடர்ந்து மெட்ராஸ், காபலி, காலா, சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’ படத்தை இயக்கி வருகிறார். 2024-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், படத்தின் இறுதிகட்ட பணிகளில் பிஸியாக உள்ளார்.

இயக்குநர் பா.ரஞ்சித், நீலம் புரொடக்‌ஷன்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ளார். அதேபோல் நீலம் பண்பாட்டு மையம் என்ற பெயரில் பண்பாட்டு நிகழ்வுகளையும் அவ்வப்போது நடத்தி வருகிறார். அந்த வகையில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் மக்களிசை என்ற பெயரில் பாரம்பரிய இசைகலைஞர்கள், நடனகலைஞர்களை வைத்து வைத்து இசை நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார்.

Hosur

இந்த ஆண்டிற்கான மார்கழியில் மக்களிசை 2023 நிகழ்ச்சி கேஜிஎஃப் பகுதியில் கடந்த 23-ம் தேதி துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை இயக்குநர் பா.ரஞ்சித் துவக்கி வைத்தார். தொடர்ந்து நேற்றைய தினம் ஓசூரில் இதன் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் பாரம்பரிய இசைக் கலைஞர்கள் நிகழ்த்திய இசை நிகழ்ச்சிகளை ஏராளமான மக்கள் விருப்பத்துடன் கண்டு களித்தனர்.

சென்னையிலும் இந்த நிகழ்ச்சி வரும் 28-ம் தேதி துவங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒசூரில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியிம் இயக்குநர் பா.ரஞ்சித் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு ஆண்டுதோறும் மக்களிடையே மிகுந்த வரவேற்பு காணப்படும் நிலையில், இந்த வருடமும் சென்னை, கோவை, மதுரை போன்ற இடங்களில் இந்த நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கேஜிஃஎப்பில் நிகழ்ச்சியில் நடிகர் தினேஷ், கலையரசன், எழுத்தாளர் தமிழ் பிரபா, இயக்குநர் தினகர், ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.


இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் பா.ரஞ்சித், இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சிக்கு சூப்பராக குத்தாட்டம் போட்டது பார்வையாளர்களை மிகவும் உற்சாகப்பட செய்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web