‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது...! குவியும் வாழ்த்துகள்!!

 
The Elephant Whisperers

சிறந்த ஆவண குறும்படம் எனும் பிரிவில் போட்டியிட்ட இந்தியாவின் ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ படம் ஆஸ்கர் விருதைத் தட்டிச் சென்றுள்ளது.

அகாடமி விருது எனப்படும் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றுவருகிறது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் இந்தியா சார்பிலும் பலர் கலந்து கொண்டுள்ளனர். தற்போது இந்தியா சார்பில் குறும்பட பிரிவில் கலந்து கொண்ட தி எலிபெண்ட விஸ்பர்ஸ் படம் சிறந்த ஆவண குறும்படம் என தேர்ந்தெடுக்கப்பட்டு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டிருக்கிறது.

The Elephant Whisperers

தாயை பிரிந்து தவித்த 2 குட்டி யானைகளை பராமரிக்கும் நீலகிரியின் முதுமலையை சேர்ந்த பொம்மன், பொம்மி தம்பதி குறித்த ஆவண குறும்படமான 'தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்' படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ ஆவண குறும்படத்தை இயக்கிய கார்திகி குன்செல்வெஸ் மற்றும் தயாரிப்பாளர் குனெட் மொன்கோ ஆஸ்கர் விருதை வென்றனர்.

தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால் இது இன்னமும் நமக்கு பெருமை தரும் விசயமாக அமைந்துள்ளது.  நீலகிரியில் மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ளது ஆசியாவின் மிகப் பெரிய யானைகள் முகாமான தெப்பக்காடு.  இங்கு காட்டு நாயக்கர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதி யானை பராமரிப்பு செய்து வருகின்றனர்.

கடந்த 2017-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சரகத்துக்குட்பட்ட அய்யூர் பகுதியில் தாயிடமிருந்து பிரிந்து காயத்துடன் சுற்றித் திரிந்த குட்டி ஆண் யானையை மீட்டு இந்த இடத்துக்கு அனுப்பி வைத்தனர்.


அந்த யானைக்கு ரகு என்று பெயரிட்டு அதனை பராமரித்து வருகின்றனர் பொம்மனும் பெள்ளியும். இந்த கதையை அப்படியே ஆவணப் படமாக எடுத்திருக்கிறார் உதகமண்டலத்தைச் சேர்ந்த கார்த்திகி கொன்சால்வ்ஸ். இவர் ஒரு ஆவணப்பட இயக்குநராவார். பல ஆவணப்படங்களில் இவர் பணிபுரிந்துள்ளார். ஆஸ்கர் விருது வென்றுள்ள நிலையில் படக்குழுவினருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

From around the web