பிரபல ஆஸ்கார் பட நடிகர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

 
Lee Sun Kyun

‘பாராசைட்’ படத்தில் நடித்த பிரபல நடிகர் லீ சன் கியூன் காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

2001-ம் ஆண்டில் மேடை இசை நாடகமான ‘தி ராக்கி ஹாரர்’ ஷோவில் பிராட் மேஜர்ஸ் ஆக அவர் தனது மேடை நடிப்பை அறிமுகமானார். தொடர்ந்து 2007-ல் வெளியான ‘ஒயிட் டவர்’ என்ற மருத்துவ நாடகத்தில் நடித்ததற்காக லீ சன் கியூன் நன்கு அறியப்பட்டார். மேலும் அவர் ‘காபி பிரின்ஸ்’ படத்தில் நடித்ததற்காக அங்கீகாரம் பெற்றார்.

2019-ல் வெளிவந்த விருது பெற்ற ‘பாராசைட்’ படத்தில், பணக்கார குடும்பத்தின் தந்தையான பார்க் டோங்-இக் என்ற பாத்திரத்திற்காக லீ சன் கியூன் மிகவும் அங்கீகரிக்கப்பட்டவர். அவருக்கு ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதும் வழங்கப்பட்டது.

Lee Sun Kyun

இந்த நிலையில் லீ சன் கியூன் மர்மமான முறையில் காரில் இறந்து கிடந்ததாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 48. இவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, அவரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் போலீசார் விசாரணையும் நடத்தி உள்ளனர்.

போலீஸ் விசாரணைக்கு பின்னர் லீ சன் கியூன் இப்படி மர்மமான முறையில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாராது கொலை செய்துள்ளார்களா என்கிற கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

RIP

பாராசைட் திரைப்படம் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு போன்ற பிரிவுகளின் கீழ் விருதுகளை கொத்தாக அள்ளிச் சென்று உலகளவில் கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

From around the web