சூர்யாவை ஒருநாள் கடன் கேட்ட ரசிகை.. ஜோதிகா போட்ட நச் கமெண்ட்

 
Jyothika - Suriya Jyothika - Suriya

நடிகர் சூர்யாவை எனக்கு ஒருநாள் கடனாகக் கொடுங்கள் என்று கேட்ட ரசிகைக்கு ஜோதிகா கொடுத்த ரிப்ளைதான் இப்போது இணையத்தில் செம வைரலாகிறது.

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் ஜோடி சூர்யா - ஜோதிகா. இருவரும் 1999-ம் ஆண்டு வெளியான ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் முதன் முதலில் ஒன்றாக நடித்தனர். அப்போதிலிருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். அதன் பின், பேரழகன், மாயாவி, காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. 2003-ம் ஆண்டு வெளியான ‘காக்க காக்க’ படத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்தது, அதன் பின் இருவரும் 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 2007-ம் ஆண்டு தியா என்ற மகளும், 2010-ம் ஆண்டு தேவ் என்ற மகனும் பிறந்தனர்.

Jyothika - Suriya

திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகி இருந்த ஜோதிகா, ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், இந்தி மொழிகளிலும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மலையாளத்தில் மம்முட்டியுடன் நடித்த ‘காதல் தி கோர்’ படம் ஜோதிகாவுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. அதை தொடர்ந்து பல வருடங்கள் கழித்து ‘ஷைத்தான்’ படத்தின் மூலம் தற்போது மீண்டும் இந்தியில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் ஜோ. படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஜோதிகா, அடிக்கடி அவர் நடித்து கொண்டு இருக்கும் படத்தின் செய்திகளை பற்றியும், தன் குடும்பத்துடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், உடற்பயிற்சி செய்யும் வீடியோகளையும் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில், ‘ஷைத்தான்’ படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக அந்தப் படப்பிடிப்பின் நினைவுகளை வீடியோவாகப் பகிர்ந்திருந்தார். இதில் தனது கணவர், நடிகர் சூர்யாவுடன் இருக்கும் புகைப்படங்களையும் ஜோதிகா பகிர்ந்திருந்தார். 

Jyothika - Suriya

இதைப் பார்த்த சூர்யாவின் தீவிர ரசிகை ஒருவர், “‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்தில் ஐஷூவுடன் ஒருநாள் சூர்யாவை அனுப்பி வைப்பது போல, எனக்கு ஒருநாள் கடன் கொடுப்பீர்களா? இந்த ஜென்டில்மேனுக்கு 15 வருடங்களாக ரசிகை நான்’ எனக் கேட்டிருக்கிறார். இதைப் பார்த்த ஜோதிகா, ‘கண்டிப்பாக அனுமதி இல்லை!’ என ஸ்ட்ரிக்டாக மறுத்திருக்கிறார். இதற்கு அந்த ரசிகை, ‘நீங்கள் ரிப்ளை செய்ததே மகிழ்ச்சி! சூர்யா எப்போதும் உங்களுடையவர்’ எனக் கூறி இருக்கிறார். இந்த கியூட்டான உரையாடல் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருக்கிறது.

From around the web