20 ஆண்டுகளுக்கு பிறகு அதே நாளில்.. பிரபல நடிகருக்கு மீண்டும் திருமணம்.. வைரலாகும் வீடியோ!

 
Ronit Roy

நடிகர் ரோனித் ராய் தன்னுடைய மனைவியையே இரண்டாவது திருமணம் செய்துக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

1989-ல் வெளியான ‘ராம் லகான்’ படத்தின் மூலம் உதவி இயக்குநராக பாலிவுட் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கியவர் ரோனித் ராய். பின்னர், ‘ஜான் தேரே நாம்’ என்ற படத்திலும் நடிகராக பயணத்தை ஆரம்பித்தார். ஹீரோவாக சில படங்களிலும் நடித்திருந்தாலும், அதன் பிறகு வில்லனாக மிரட்டினார் ரோனித்.

Ronita Roy

மேலும் ஜெயம் ரவி மற்றும் நிதி அகர்வால் நடிப்பில் வெளியான ‘பூமி’ படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில், 58 வயதாகும் ரோனித் ராய் தனது மனைவி ஜோன்னா நீலம் என்பவரை திருமணம் செய்து 20 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, திருமண நாளிலேயே மீண்டும் திருமணம் செய்துள்ளார். இவரது திருமணத்தில் பாலிவுட் நட்சத்திரங்களும் ரசிகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

ரோனித் ராய் - ஜோன்னா நீலம் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மனைவியுடன் மறுபடியும் திருமணம் செய்துக் கொள்ள கோவாவில் உள்ள கோயில் ஒன்றில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார் ரோனித் ராய்.

முதல் திருமணத்தை எப்படி செய்து கொண்டனரோ அதே போல 20 ஆண்டுகள் கழித்தும் இந்த ஜோடி திருமணம் செய்துள்ளது. திருமணம் முடித்ததும், தனது மனைவிக்கு உதட்டு முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார் ரோனித். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web