ஆபாச மெசேஜ்.. மிரட்டும் கணவர்.. இரவோடு இரவாக போலீஸ் ஸ்டேஷன் வந்த ரச்சிதா!!

 
Rachitha

பிரபல சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி, தனது கணவர் மிரட்டுவதாக கூறி, மாங்காடு காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. அந்தத் தொடரில் இவருடன் நடித்த தினேஷ் இடையே ஏற்பட்ட பழக்கம் கடந்த 2013ம் ஆண்டு 7ம் தேதி கல்யாணத்தில் முடிந்தது.

Rachitha

இந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு உருவாகி தனித்தனியாக வசித்து வந்தனர். தினேஷ் சீரியல்களில் நடிக்க, விஜய் டிவியில் இருந்து ரச்சிதாவிற்கு பிக்பாஸ் அழைப்பு வர அவர் அங்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தினேஷ் தன்னுடைய செல்போனுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்புகிறார் என்றும் மிரட்டல் விடுப்பதாகவும் கூறி நடிகை ரச்சிதா சென்னை மாங்காடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

Mangadu Womens PS

புகாரின் பேரில் ஆஜரான தினேஷ் ரச்சிதா விவாகரத்து பெறுவதற்கு நீதிமன்றத்தை நாடி கொள்ளலாம் என தெரிவித்து விட்டு சென்று இருக்கிறார். இது தொடர்பாக ரச்சிதாவிடமும் போலீஸார் விசாரணை நடத்தியி இருக்கின்றனர். இவர்கள் இடையிலான பிரச்சினைக்கு டப்பிங் ஆர்டிஸ்ட்டான ஜிஜியின் தலையீடுதான் காரணம் என்று சின்னத்திரை வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

முன்னதாக ஜிஜி, தினேஷ் தன்னை தேவையில்லாமல் தொந்தரவு செய்வதாகக்கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web