சாலை விபத்தில் பிரபல இயக்குநர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி!

 
Arputhan

பிரபல இயக்குநர் அற்புதன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். அவருக்கு வயது 52.

2002-ல் வெளியான ‘அற்புதம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அற்புதன். இந்த படத்தின் மூலம் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் ராகவா லாரன்ஸுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. மேலும், இந்த படத்தில் குணால், அனு பிரபாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

Arputham

தொடர்ந்து, ஷாம் நடிப்பில் வெளியான ‘மனதோடு மழைக்காலம்’, தெலுங்கில் உதைக்கிரண் நடித்த ‘செப்பவே சிறுகாளி’ ஆகிய திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். 

இந்நிலையில் அற்புதன் நேற்று திடீர் மரணம் அடைந்திருக்கிறார் என்ற செய்தி வெளியாகி சினிமா துறையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

RIP

அவர் விபத்தில் காயமடைந்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் திடீரென சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் நடிகர்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

From around the web