பிரபல இயக்குநரும் நடிகருமான ஜூனியர் மெஹமூத் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி!

 
junior-mehmood

பழம்பெரும் நடிகர் ஜூனியர் மெஹமூத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 67.

1967-ம் ஆண்டு வெளியான ‘நவுனிகல்’ என்ற இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜூனியர் மெஹமூத். இவர், இதுவரை 265 திரைப்படங்களில் நடித்துள்ளார். ஜூனியர் மெஹமூத் 6 மராத்திய மொழி திரைப்படங்களை தயாரித்து இயக்கியும் உள்ளார். கட்டி படாங், மேரா நாம் ஜோக்கர், பரவரிஷ், தோ ஆவூர் தோ பாஞ்ச் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ள இவர் இந்தி, மராத்தி, பஞ்சாபி உட்பட 7 மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

junior-mehmood

இவர் கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இவர் புற்றுநோயின் 4ம் நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக அவருக்கு மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஜூனியர் மெஹமூத் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவரது உடல் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

RIP

பழம்பெரும் இந்தி திரைப்பட காமெடி நடிகர் மெஹமூத் அலியின் மகனான நடிகர் மெஹமூத்தின் இயற்பெயர் நயீம் சயீத். சினிமா ரசிகர்கள் இவரை 'ஜூனியர் மெஹமூத்' என்று தந்தையின் பெயரால் அழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web