பாத்ரூம் கூட இல்ல.. அட்ஜஸ்ட் பண்ண சொல்றாங்க.. நடிகை அம்மு அமிராமி ஆதங்கம்!

 
Ammu Abirami

தமிழ் சினிமாவில் தான் சந்தித்த மோசமான அனுபவங்கள் பற்றி நடிகை அம்மு அபிராமி கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2017-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘பைரவா’ படத்தில் மெடிக்கல் காலேஜ் மாணவிகளின் ஒருவராக நடித்தவர் அம்மு அபிராமி. தொடர்ந்து ‘என் ஆளோட செருப்ப காணோம்’ படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்தார். இதைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடிகர் கார்த்திக்கு தங்கையாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அதன் பிறகு தானா சேர்ந்த கூட்டம், ராட்சசன், துப்பாக்கி முனை, அசுரன், தம்பி, யானை, தண்டட்டி போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். குணச்சித்திர நடிகையாக அறிமுகமாகி, தற்போது ஹீரோயினாக புரமோட் ஆகி உள்ள அம்மு அபிராமி, அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கண்ணகி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

Ammu Abirami

பல படங்களில், கிராமத்து வேடங்களை தேர்வு செய்து நடித்துவரும் அம்மு அபிராமி, கண்ணகி படத்தின் பிரமோஷனில், ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்திக்கும் முக்கிய பிரச்சனை குறித்து பேசி ஆதங்கப்பட்டுள்ளார்.

கண்ணகி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அம்மு அபிராமி, பலகோடி செலவு செய்து படம் எடுக்கிறார்கள். ஆனால் படப்பிடிப்புக்காக வெளியே செல்லும்போது சரியான பாத்ரூம் வசதி கூட இல்லாமல் அவதிப்படுவதாக குற்றம் சாட்டினார். பாத்ரூம் போகவும், உடை மாற்றவும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாகவும், இது குறித்து கேட்டால் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுமாறு கூறுகிறார்கள்.

Ammu Abirami

பாத்ரூம் விஷயத்தை எப்படி சகித்துக் கொள்ள முடியும் என்று எனக்கு தெரியவில்லை.. முடிந்தவரை ரெடிமேட் டாய்லெட் போன்றவற்றை படப்பிடிப்புகளில் கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். மேலும் கண்ட கண்ட இடத்தில் பாத்ரூம் போவதால், தனக்கு இன்பெக்சன் ஆகி விட்டதாகவும்.. முன்னணி நடிகர்கள் - நடிகைகளுக்கு மட்டும் கேரவன் வைத்து கொடுக்கிறார்கள். ஆனால் வளரும் நடிகைகள் மற்றும் துணை நடிகர்கள் இதுபோன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவித்து வருவதாகவும், அவர்களும் மனிதர்கள் தானே என வெளிப்படையாக பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அம்மு அபிராமி ஹீரோயினாக நடித்துள்ள ஜிகிரி தோஸ்து படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் அடுத்த ஆண்டு மட்டும் சுமார் 10 படங்களில் அம்மு கமிட் ஆகி படு பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web