இந்தியை படிக்க வேண்டாம் என்று யாரும் கூறவில்லை.. டென்ஷனான நடிகர் விஜய் சேதுபதி..!

 
Merry Christmas

பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தி குறித்த கேள்வியால் திடீரென நடிகர் விஜய்சேதுபதி கடுப்பானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, காயத்ரி மற்றும் ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் வரும் ஜனவரி 12-ம் தேதி தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது. இதையொட்டி படக்குழுவினர் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் கேள்விக்கு விஜய் சேதுபதி பதில் அளித்தார்.

அவரிடம், ‘விஜய் சேதுபதி சார் 75 வருஷம் நம்முடைய கலாச்சாரம், அரசியல் பின்னணி வந்து இந்திக்கு எதிரானது. இன்றைக்கும் இந்தி தெரியாது போடா என்று டி-ஷர்ட் போட்டுதான் இந்தியை எதிர்த்து அரசியல் பண்ணிக் கொண்டிருக்கிறோம். நீங்க வந்து…’ என்று ஒரு செய்தியாளர் கேட்க ஆரம்பித்தார்.

Merry Christmas

அப்போது குறுக்கிட்ட விஜய் சேதுபதி, ‘இந்த மாதிரி கேள்வியை நீங்க ஏற்கனவே ஆமிர் கான் சார் வந்தபோது கேட்டீங்கன்னு நினைக்கிறேன். எல்லா சமயத்திலும் இந்த கேள்வியை கேட்கிறீங்க. எதுக்கு இந்த கேள்வியை கேட்கிறீர்கள்? என்னை மாதிரி ஆட்களிடம் கேட்டு என்ன ஆகப்போகிறது? என்று கேட்டார்.

அதற்கு பதில் அளித்த அந்த செய்தியாளர், ‘என்ன அப்படின்னா நம்ம தமிழ்நாட்டில் திருப்பி திருப்பி ஒரு விஷயத்தை சொல்கிறோம். இந்தி வேண்டாம் என்று. இந்தி படிக்க வேண்டாம் அப்படின்னு..’ என பதில் அளிக்க, அப்போதும் குறுக்கிட்ட விஜய் சேதுபதி, ‘அப்படியெல்லாம் சொல்லவே இல்ல சார். இந்தி படிக்க வேண்டாம் என்று நாம் சொல்லவே இல்லை. திணிக்க வேண்டாம் என்று தான் சொல்கிறோம். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு சார்.


நீங்க கேள்வியையே தப்பாக கேட்கிறீர்கள். இந்த இடத்தில் அது தேவையில்லாத கேள்வியும் கூட. இந்தியை படிக்காதே என்று யாரும் சொல்லவில்லை. இங்கு படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.’ என்று பதில் அளித்தார்.

From around the web