விஜய் ரசிகர்களுக்கு NEW YEAR சர்பரைஸ்.. ‘தளபதி 68’ படத்தின் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது!

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 68’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாக உள்ளது.
‘லியோ’ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கம் புதிய படத்தில் நடித்து வருகிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த இந்த படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், லைலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. சென்னையில் இளம் விஜய் நடிக்கும் காட்சி மற்றும் பாடல்கள் படமாக்கப்பட்டன. பின்னர் தாய்லாந்து சென்று அங்கு அதிரடி ஆக்ஷன் காட்சி ஒன்றை படமாக்கியது. தற்போது இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக தளபதி 68 படக்குழுவினர் ஐதராபாத்தில் முகாமிட்டு உள்ளனர்.
இதனிடையே தளபதி 68 படத்தின் டைட்டில் குறித்து பல்வேறு தகவல்கள் கடந்த சில தினங்களாக சோசியல் மீடியாவில் உலா வந்த வண்ணம் உள்ளன. இப்படத்திற்கு ஆங்கிலத்தில்தான் தலைப்பு வைக்கப்பட உள்ளதாக முன்னதாகவே தகவல்கள் வெளியானது. ‘பசில்’ அல்லது ‘பாஸ்’ என்பதுதான் தலைப்பாக இருக்கும் என கூறப்பட்டது. இந்த தகவல்கள் வெளியானவுடன் தளபதி 68 படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் தளத்தில் படத்தின் பெயர் பாஸ் அல்லது பசில் இரண்டுமே இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
Are you ready for #Thalapathy68FirstLook ?@actorvijay Sir @vp_offl @thisisysr @aishkalpathi @Ags_production @TSeries @PharsFilm pic.twitter.com/4l3WiqIdqt
— Archana Kalpathi (@archanakalpathi) December 31, 2023
இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இன்று மாலை 6 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.