‘விடாமுயற்சி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு.. வைரலாகும் அஜித் திரிஷா பதிவு
அஜித்குமார் மற்றும் திரிஷா இருக்கும் புதிய போஸ்டரை ‘விடாமுயற்சி’ படக்குழு வெளியிட்டுள்ளது.
‘துணிவு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அஜர்பைஜான் நாட்டில் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. இதன் பிறகு ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. விடாமுயற்சி படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றுள்ளது. வரும் தீபாவளிக்கு இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கடந்த மே மாதம் 30-ம் தேதி புதிய தோற்றம் வெளியான நிலையில், அதனைத் தொடர்ந்து ஜூலை 7-ம் தேதி இரண்டு போஸ்டர்களை தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டது. அது சமூக வலைதளங்களில் வைரலானது.
Adding a touch of fondness! ✨ Presenting the third look of #VidaaMuyarchi 🌟 Witness the Vintage pair #AjithKumar & @trishtrashers 🫰🏻💗✨#EffortsNeverFail#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @trishtrashers @akarjunofficial… pic.twitter.com/swUOkMdsCr
— Lyca Productions (@LycaProductions) July 19, 2024
இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் நடித்துவரும் ‘விடாமுயற்சி’ படத்தின் புதிய போஸ்டர்களை படக்குழு நேற்று (ஜூலை 19) வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் அஜித் மற்றும் திரிஷா காம்போ ரசிக்க வைக்கிறது.