விக்னேஷ் சிவனை Unfollow செய்த நயன்தாரா.. ரசிகர்கள் அதிர்ச்சி!

 
Nayanthara

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை இஸ்டாகிராமில் அன்பாலோ செய்துவிட்டதாக இணையத்தில் செய்தி ஒன்று வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. கடந்த 2005-ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர், சந்திரமுகியில் சூப்பர் ஸ்டாருடன் நடித்தார். பின்னர், விஜய், சூர்யா, அஜித், விஷால், சிம்பு, உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையானார்.

Nayanthara

சுமார் 6 வருடங்களுக்கு மேலாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருவீட்டு பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் இருக்கும் நிலையில், நயன்தாரா விக்னேஷ் சிவனை இஸ்டாகிராமில் அன்பாலோ செய்துவிட்டதாக இணையத்தில் செய்தி ஒன்று வைரலாகி வருகிறது.

மேலும் நடிகை நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷேர் செய்துள்ள பதிவில், “எனக்கு இது கிடைத்தது என்று அவள் கண்களில் கண்ணீருடன் என்றென்றும் சொல்வாள்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவால் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இருப்பினும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்படியேதான் இருக்கின்றன.

Nayanthara

முன்னதாக இயக்குநர் விக்னேஷ் சிவன், காதலர் தினத்தன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “எங்கள் காதலுக்கு வயது பத்து. ஒரு தசாப்தமாக நயனுடன் நான் பயணித்துக்கொண்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் ரோஜாப்பூக்கள் நிரம்பிய பூங்கொத்து ஒன்றையும் பரிசாக கொடுத்து தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web