குழந்தைகளுக்கு கியூட்டாக புரபோஸ் செய்த நயன்தாரா.. இன்ஸ்டா பதிவு வைரல்!

 
Nayanthara

தன்னுடைய இரட்டை குழந்தைகளான உயிர் மற்றும் உலகிற்கு நடிகை நயன்தாரா கியூட்டாக புரபோஸ் செய்தபோது எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. கடந்த 2005-ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர், சந்திரமுகியில் சூப்பர் ஸ்டாருடன் நடித்தார். பின்னர், விஜய், சூர்யா, அஜித், விஷால், சிம்பு, உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையானார்.

Nayanthara

சுமார் 6 வருடங்களுக்கு மேலாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருவீட்டு பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் முதலில் திருப்பதியில் நடைபெற திட்டமிட்ட நிலையில், பின்னர் இவர்கள் தங்கள் திருமண வீடியோவை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்துக்கு வழங்கியதால், மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு மாற்றப்பட்டது.

திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகளை வாடகை தாய் மூலம் பெற்றெடுத்த நயன்தாரா,  தற்போது தன்னுடைய குழந்தைகள் மற்றும் கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது தன்னுடைய குழந்தை மற்றும் கணவருடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில்கூட கார் ஒன்றில் தனது இரண்டு மகன்களில் ஒரு மகனை கையில் ஏந்தியபடி இருந்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. எல்லோரும் தனது காதலருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துவரும் சூழலில் நயனோ தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்தப் புகைப்படங்களில் இரண்டு மகன்களுக்கும் வாஞ்சையோடு முத்தம் கொடுக்கிறார். அந்தப் புகைப்படங்களை ரசிகர்கள் இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கிவருகின்றனர்.

From around the web