பிராண்ட் ப்ரோமோஷனில் குதித்த நயன்தாரா.. வைரலாகும் புகைப்படங்கள்!
பிரபல நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து துவங்கிய புதிய தொழிலுக்காக அவர் ப்ரோமோஷனில் இறங்கியுள்ளார்.
தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. கடந்த 20 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வரும் நயன்தாராவின் மார்க்கெட் படத்திற்கு படம் உயர்ந்துகொண்டு தான் இருக்கின்றது.
2005-ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர், சந்திரமுகியில் சூப்பர் ஸ்டாருடன் நடித்தார். பின்னர், விஜய், சூர்யா, அஜித், விஷால், சிம்பு, உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையானார்.
சுமார் 6 வருடங்களுக்கு மேலாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா காதலித்து வந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இப்பொது உயிர் மற்றும் உலகு என்ற இரு மகன்கள் உள்ளனர்.
A woman goes through a number of Wishing a comforteriod cyclevery woman, and this time to be as happy and free as any other time of the month 🤗🤗#HappydayEveryday with @femiofficial9 #Nayanthara pic.twitter.com/h1ziKgq68A
— Nayanthara FC Chennai (@AjithTharan) July 5, 2024
கடந்த ஆண்டு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து ‘Femi 9’ என்கின்ற ஒரு புதிய பிராண்ட் ஒன்றை உருவாக்கினார்கள். இதில் பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள் மற்றும் மாதவிடாய் காலத்தில் தேவைப்படும் சானிட்டரி நாப்கின் போன்ற பல சாதனங்களை இவர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.