10 வருடங்கள் பிறகு இணையும் நயன்தாரா - ஜெய்..  வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

 
Nayan-Jai

நயன்தாராவின் 75-வது படத்தில் நடிகர் ஜெய் இணைந்து நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் கடந்தாண்டு இறுதியில் நயன்தாரா நடிப்பில் வெளியான படம் ‘கனெக்ட்’. இந்தப் படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜவான்’ படத்தில் நயன்தாரா நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகிறார். 

Nayanthara

தொடர்ந்து ஜெயம் ரவியுடன் இணைந்து ‘இறைவன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் நாட் ஸ்டூடியோஸ், ஜீ ஸ்டூடியோஸ் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து நயன்தாராவின் 75-வது படத்தை தயாரிக்கின்றன.

புதுமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கவுள்ள இந்தப் படத்தில், நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். ராஜா ராணி படத்திற்குப் பிறகு இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா, ஜெய் மற்றும் சத்யராஜூடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார். ரெடின் கிங்ஸ்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

Jai

இந்நிலையில் தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர்கள் இணைந்துள்ள இப்படத்திற்கு சூப்பர் ஸ்டார் 75 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதாவது நயன்தாராவின் 75வது திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் ஜெய் நடிக்க இருக்கும் நிலையில் இவருடைய பிறந்தநாள் இன்று என்பதால் இதனை முன்னிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது.

From around the web