2வது திருமண நாளை செம ஸ்பெஷலாக கொண்டாடிய நயன்-விக்கி! வைரல் வீடியோ

 
Nayanthara - Vignesh Sivan

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாரா மற்றும் மகன்களுடன் தனது இரண்டாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி வருகின்றார்.

2012-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான ‘போடா போடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதனைத் தொடர்ந்து நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக உயர்ந்தார். இதை தவிர சில படங்களை தயாரித்துள்ளார் நெற்றிக்கண், கூழாங்கல், ராக்கி போன்ற படங்களை தயாரித்துள்ளார். மேலும் பல படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார்.

Nayanthara - Vignesh Sivan

இந்த நிலையில், கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாரான நயனதாராவை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். இதையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி விக்னேஷ் சிவன் -நயன்தாராவிற்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்ததாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

இந்த நிலையில், தனது மனைவி நயன்தாரா மற்றும் இரண்டு மகன்களோடு வெளிநாட்டில் சுற்றுலா மேற்கொண்டுள்ள விக்னேஷ் சிவன், தங்களது இரண்டாம் ஆண்டு திருமண நாளை மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளனர். 

திருமண நாளை முன்னிட்டு ஸ்பெஷல் வீடியோவை ஷேர் செய்த விக்கி, அந்த போஸ்டில், “என் காதலுக்கு 10 ஆண்டுகள், கணவன் மனைவியாக 2 ஆண்டுகள். இந்த காதலுக்கு எனக்கு கிடைத்த பரிசுகள் உயிர், உலகம். ல வ் யூ தங்கமே, இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்”  என குறிப்பிட்டுள்ளார்.  இந்த போஸ்டுக்கு கீழ் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

From around the web